தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போராட்டத்திற்கு ஆதரவு கோரிய சந்திரபாபு நாயுடு!

அமராவதி: ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணாவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

போராட்டத்திற்கு ஆதரவு கோரிய சந்திரபாபு நாயுடு!
போராட்டத்திற்கு ஆதரவு கோரிய சந்திரபாபு நாயுடு!

By

Published : Jan 10, 2020, 4:26 PM IST

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கிய ஜி.என். ராவ் குழு ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் வழங்கிய விவசாயிகளும், பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிபட்டினத்தில் அமராவதியே ஆந்திராவின் தலைநகராக தொடர வேண்டும் என வலியுறுத்தி தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

ஆந்திரா தலைநகர எதிர்ப்பு போராட்டம்

இந்த போராட்டத்திற்கு மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியையும், ஆதரவையும் அளிக்குமாறு சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். இந்த போராட்டத்தில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க...இந்தாண்டு கட்சி தொடக்கம் - நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details