ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் உள் துறை அமைச்சர் சின்ன ராஜப்பா ஆகியோர் விஜயவாடா விமானநிலையம் வந்தனர். அப்போது இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்ததால், அவர் நேரடியாக விஜபி வாகனத்தில் ஏறி நேரடியாக விமானத்திற்குச் செல்ல முயன்றார்.
விமானநிலையத்தில் சந்திரபாபுவுக்கு சோதனை - தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்!
விஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திராபாபு நாயுடுவை விஜயவாடா விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் சோதனை செய்ததற்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
chandrababu naidu
ஆனால் பாதுகாப்பு நுழைவாயிலில் இருந்த சுங்க அலுவலர்கள் சந்திரபாபு நாயுடுவை நிறுத்தி சோதனையிட்டனர். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திராவில் பதற்றம் நிலவிவருகிறது.