ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான களப்பணிகளை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். திருப்பதி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அவர் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
ஜெகனையைும் கேசிஆரையும் ஆட்டிப்படைக்கும் மோடி! சந்திரபாபு குற்றச்சாட்டு - ஆந்திர தேர்தல்
அமராவதி: ஜெகன் மோகன் ரெட்டியையும், சந்திரசேகர ராவையும் பிரதமர் மோடி ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறார் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
babu
அதன்படி பரப்புரை பொதுக்கூட்டத்தில்பேசிய அவர், “பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதாகி விசாரணையை எதிர்கொண்டுவரும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்கிறார்.
ஜெகன்மோகன் ரெட்டியையும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவையும் மோடி ஆட்டிப்படைத்து வருகிறார். தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற ஜெகன்மோகன் ரெட்டி பல வகைகளில் முயற்சி செய்துவருகிறார்” என்றார்.