நடிகை கங்கனா ரணாவத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக அகாரா பரிஷத், விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) மற்றும் பிற அமைப்பினர் மகாராஷ்டிர முதலமைச்சரை அயோத்தியிலிருந்து விலகி இருக்குமாறு தெரிவித்தனர்.
உத்தவ் தாக்கரே எப்போது வேண்டுமானாலும் அயோத்தி வரலாம் - ஸ்ரீராம ஜன்மபூமி அறக்கட்டளை - ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை
அயோத்தி: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அயோத்தியைப் பார்வையிட எப்போதும் வரவேற்கப்படுவதாக ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே எப்போதுவேண்டுமானாலும் அயோத்தி வரலாம்- சம்பத் ராய்
இந்து அமைப்பினரின் இந்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அயோத்திக்குள் நுழைவதைத் தடுக்கும் துணிவு யாருக்கும் கிடையாது என்றும், அயோத்தியைப் பார்வையிட உத்தவ் தாக்கரே எப்போதும் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.