தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இதுவரை ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை - இந்தியாவில் கரோனா பாதிப்பற்ற ஒரே மாவட்டம்! - காமராஜநகர்

பெங்களூரு: இந்தியாவில் பல்வேறு பகுதிகளும் கரோனாவின் கோரதாண்டவத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வேளையில் கர்நாடகாவிலுள்ள சாமராஜநகர் என்ற மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்குக் கூட கரோனா தொற்று ஏற்படாதது ஆச்சரியமளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

மாவட்டம்
மாவட்டம்

By

Published : Jun 3, 2020, 7:58 PM IST

Updated : Jun 3, 2020, 10:04 PM IST

கரோனா வைரஸ் உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் இப்பெருந்தொற்றில் சிக்கிதவித்துவரும் நிலையில், கேரள மாநிலம் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது. அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கரோனா வைரஸ் பரவலைப் பெரிய அளவில் கட்டுப்படுத்தியுள்ளது.

கேரளாவைப் போலவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டு, கரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது கர்நாடகா மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டம். கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இம்மாவட்டமானது, கரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழ்நாட்டின் ஈரோடு, கர்நாடகாவின் நஞ்சன்குட் ஆகிய மாவட்டங்களுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது.

டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் கரோனா வைரஸ் நோயால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கருணாநிதியை நினைவுகூர்ந்த மம்தா!

Last Updated : Jun 3, 2020, 10:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details