இந்திய எல்லைப் பகுதியில் ராணுவ அலுவலர்கள் கடந்த மாதம் கட்டமைப்புப் பணிகள் மேற்கொண்டனர். அப்போது, சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்தது.
இந்தப் பிரச்னையால் இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்தியாவின் எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கை அடுத்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு பணியிலிருந்த ராணுவ அலுவலர் கர்னல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இந்திய படைவீரர்களை சீன ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை செய்தனர்.
இந்தத் தாக்குதலில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய் கிஷோர், சந்தன் குமார், குண்டகுமார், அமன் குமார், சுனில் குமார் ஆகிய ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.