தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சி - அமித் ஷா குற்றச்சாட்டு - நாட்டின் அமைதி குறித்து அமித் ஷா

டெல்லி: நேபாளம், பூடான் எல்லைப் பகுதிகளைப் பயன்படுத்தி நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Amit Shah
Amit Shah

By

Published : Dec 19, 2019, 3:42 PM IST

நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய ஆயுத காவல் படைகளில் ஒன்று எஸ்.எஸ்.பி. எனப்படும் சாஸ்த்ரா சீமா பால். இது உள் துறை அமைச்சகத்திற்கு கீழ் செயல்பட்டுவருகிறது. நாட்டின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கும் இந்தப் படை தோற்றுவித்து இன்றோடு 56 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது அவர், "நாட்டில் அமைதி நிலவிட வேண்டாம் என நினைப்பவர்களே நேபாளம், பூடான் எல்லைப் பகுதிகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். இரு நாடுகளுடனும் இந்திய நல்லுறவை பேணிவருகிறது. 130 கோடி இந்தியர்கள் நிம்மதியான உறக்கத்தை மேற்கொள்வதற்கு எல்லைப் பகுதிகளில் இருக்கும் பாதுகாப்புப் படையினரே காரணம்.

பாதுகாப்புப் படையினர் 100 நாள்களாவது தங்கள் குடும்பத்தினருடன் செலவிட அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

இதையும் படிங்க: சசி தரூர் எழுதிய புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது!

ABOUT THE AUTHOR

...view details