தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிக்குன்குனியா தடுப்பூசி உருவாக்குவதற்கு ரூ.நூறு கோடிக்கும் மேல் அளிப்பு! - உலக சுகாதார நிறுவனம்

ஹைதராபாத்: சிக்குன்குனியாவிற்கான தடுப்பூசியை உருவாக்கி வரும் பாரத் உயிரி தொழில் நுட்பம் மற்றும் சர்வதேச தடுப்பூசி நிறுவனத்திற்கு நூறு கோடி ரூபாய்க்கும் மேல், தொற்றுநோய்களுக்கான தயார் நிலை மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் நிதி அளிக்க உள்ளது.

சிக்குன்குனியா தடுப்பூசிக்கு உருவாக்குவதற்கு நூறு கோடி அளிப்பு
சிக்குன்குனியா தடுப்பூசிக்கு உருவாக்குவதற்கு நூறு கோடி அளிப்பு

By

Published : Jun 4, 2020, 1:25 AM IST

Updated : Jun 4, 2020, 10:46 AM IST

பல தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பில் செயல்படும் பாரத் உயிரி தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச தடுப்பூசி நிறுவனம், சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்த பிபிவி-87 என்னும் தடுப்பூசியை உருவாக்க முயற்சித்து வருகிறது.

இந்நிறுவனத்துக்கு தொற்றுநோய்களுக்கான தயார் நிலை மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனமான (The Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)) சுமார் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் நிதி தர ஒப்பந்தம் போட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட, இந்த தொற்றுநோய்களுக்கான தயார் நிலை மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு நார்வே அரசு, இந்திய அரசு, பில்கேட்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை - தனியார்களிடம் இருந்து பெறப்படும் நிதியை, இதுபோன்று தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது.

தொற்றுநோய்களுக்கான தயார் நிலை மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு ஐரோப்ப ஒன்றியமும் நிதி உதவி அளித்து வருகிறது. மேலும் இந்த சர்வதேச தடுப்பூசி நிறுவனத்திற்கு இந்திய அரசிடம் இருந்து ரூ.15.10 கோடி வழங்கப்பட உள்ளது.

மேலும் சிக்குன்குனியாவால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு, இந்த தடுப்பூசியை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து: 50 பேர் படுகாயம்

Last Updated : Jun 4, 2020, 10:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details