மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்துங்கள் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று அமெரிக்காவின் 16வதுஅதிபர் அபிரகாம் லிங்கன் கூறியவை. இவை வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையும் தேவை என்பதை எதிரொலிக்கும் வார்த்தைகளாகும். மிகவும் முக்கியமாக, மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது.
எந்த ஒரு தேசிய சிக்கலையும் தீர்க்கும்போது, அரசானது அதுகுறித்த நம்பத்தகுந்த தகவல்களுடன் தயாராக இருக்க வேண்டும். எதிர்பாரதவிதமாக பெருந்தொற்று 53 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது, அதனால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த மத்திய அரசின் முக்கியமான உண்மை தகவல்களில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29 லட்சம் பேரின் உயிர் பாதுகாக்கப்பட்டதாக மத்திய அரசு பிரகடனப்படுத்தியது.
இந்த கரோனா தடுப்புப் பணியின்போது எத்தனை முன் களப்பணியாளர்கள் உயிர் தியாகம் செய்தனர் என்ற தகவல் ஆவணம் மத்திய அரசிடம் இல்லை. எனினும், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பல நூறு கி.மீ-கள் நடந்து சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய தகவல்களும் அரசிடம் இல்லை. இதில் இன்னும் மேலும், அவசரமான பொது முடக்கத்தின் பலனாக சிறிய, நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றிய எண்ணற்ற ஊழியர்கள் குறித்தும் மத்திய அரசுக்கு ஒன்றும் தெரியாது. எந்த ஒரு புள்ளிவிவரமும் எண்ணிக்கையும் இல்லாமல், பொது ஊரடங்கு தொடங்கியது முதல் அதிகார இயந்திரம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியபோது, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோரின் பொறுப்புடைமையை ஒட்டுமொத்த நாடும் வெளிப்படுத்த வேண்டும் பிரதமர் மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார். எனினும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் பூங்கொத்துகளை மருத்துவமனைகளில் தூவும் மத்திய அரசின் முயற்சியை நாட்டின் மக்கள் வரவேற்றனர்.
கரோனா தடுப்பின்போது உயிர்தியாகம் செய்தவர்களுக்கு சுகாதார காப்பீடு அளிக்கும் ஏற்பாட்டை பாராட்டினோம். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது இந்த கொடூர நோயால் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்று அறியப்படும் செய்தி நெகிழ வைப்பதாக இருக்கிறது. இதுபோன்ற சுகாதார பணியில் ஈடுபட்டு உயிரிழந்த தியாகிகள் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டபோது, அதுபோன்ற தகவல்கள் இல்லை என்று அரசு சொல்கிறது. கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் உதவி கேட்டு பதிவு செய்தவர்கள் விவரங்கள் மட்டுமே இருப்பதாக அரசு சொல்லி இருக்கிறது.
ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்திய மெடிக்கல் அசோஷியேசன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் 196 மருத்துவர்கள் மரணம் அடைந்தது தொடர்பாக விரிவாக தெரிவிக்கிறது. ஆனால், பிரதமர் அலுலவகத்தில் இருந்து இதற்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே இந்த உயிரிழப்பு 382 ஆக அதிகரித்தது. ஐஎம்ஏ-வின் புள்ளி விவரத்தின்படி கரோனா தாக்கி உயிரிழந்த மருத்துவர்களில் 15 சதவிகிதம் பேர் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியவர்கள் என்றும் 8 சதவிகிதம் பேர் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்95 முகக்கவசங்கள், கையுறைகள் ஆகியவைதான் மருத்துவர்களுக்கான தனிதபர் பாதுகாப்பு முறைகளாக இருந்தது என்று மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் உறுதி செய்கின்றன. உயிரிழந்தவர்களில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் 40 சதவிகிதம்பேர் அடக்கம் என்று ஐஎம்ஏ தோராயமாகத் தெரிவிக்கிறது.