தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பரிசோதனையை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தல்! - நாடு முழுவதும் கரோனா வைரஸ்

டெல்லி: கரோனா வைரஸ் தொற்றை கண்டறிந்து கட்டுப்படுத்த மாநிலங்கள் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மாநிலங்களில் கரோனா சோதனையை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தல்!
மாநிலங்களில் கரோனா சோதனையை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தல்!

By

Published : Jul 2, 2020, 2:55 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை ஆறு லட்சத்து நான்காயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,148 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 434 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்து 641ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 17,834ஆகவும் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 26 ஆயிரத்து 947 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 3 லட்சத்து 59 ஆயிரத்து 860 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதார செயலாளர் ப்ரீத்தி சூடான், ஐசிஎம்ஆர் இயக்குனர் டாக்டர் பால்ராம் பார்கவா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஐசிஎம்ஆர் பரிந்துரைப்படி சோதனை நடத்த வேண்டும் எனவும் ‘டெஸ்ட்-டிராக்-ட்ரீட்’ என்பதுபடி அனைத்து மாநிலங்களிலும் சோதனைகளை விரைவாக செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க...அரசு பங்களாவை காலி செய்வாரா பிரியங்கா காந்தி?

ABOUT THE AUTHOR

...view details