ரயில்வே, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் டெல்லி அரசு ஒன்றாக கலந்தாலோசித்து நான்கு வாரங்களில் தீர்வு காணும் என்றும் அதுவரை ரயில் தடங்களின் அருகே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை இடிக்க மாட்டோம் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வுமுன் சமர்ப்பித்தார்.
பாதிக்கப்பட்டுள்ள ஜுகி குடியிருப்பாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், தங்களை இந்த வழக்கில் ஒரு தரப்பினராக நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இறுதி முடிவு எடுக்காதவரை குடியிருப்புகள் இடிக்கப்படாது என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், சில பகுதிகளில் குடியிருப்பை இடிக்கும் சம்பவம் நடந்திருப்பதாக சிங்வி வாதிட்டார், எனவே அதைத் தடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.