சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்த அறிக்கையை பிராந்திய மொழிகளில் வெளியிடாத காரணத்தால், டெல்லி உயர் நீதிமன்றம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடுத்தது. இந்நிலையில், இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் நோக்கம் சரி என கருத்து தெரிவித்தது. இதுகுறித்து பாப்டே கூறுகையில், "பிராந்திய மொழிகளில் அறிவிப்பு வெளியிடப்படாதது சட்டத்தின் அடிப்படையில் சரியான நடவடிக்கையே. இருப்பினும், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளும் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்புண்டு.