இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களின் பயணச் செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்கவேண்டும். மனிதாபிமான அடிப்படையிலாவது மாநில அரசுகளின் பொருளாதார நிலையறிந்து மத்திய அரசு சில சலுகைகளை அளிக்கவேண்டும்.
வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு திரும்பியுள்ளனரா என உறுதிப்படுத்தவேண்டும். சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கான முறையான பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறதா என்பதையும், தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை, மாநில அரசுகள் முறையாக வழங்குகின்றனவா என்பதையும் கண்காணிக்கவேண்டும் .