வெங்காயம் விலையேற்றத்தால் நாடு முழுவதும் வெகுஜன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தையில் போதிய அளவு இருப்பு இல்லாததால், தங்கத்தைப்போன்று ஏழைகளுக்கு எட்டாத கனியாக வெங்காயம் மாறிவிட்டது.
இதுதொடர்பாக நடவடிக்கை எப்போது என எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் பிஸாய் சோங்கர் சாஸ்திரி ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், வெங்காய விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை - வெங்காய விலையேற்றம்
டெல்லி: வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் பிஸாய் சோங்கர் சாஸ்திரி கூறினார்.
Centre putting all efforts to normalise onion supply, prize: BJP leader Bizay Sonkar Shastri
இதுகுறித்து அவர் மேலும், “இந்தாண்டு பெய்து வரும் கன மழையால் விவசாயப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக வெங்காய விலையேற்றம் குறித்து பேசப்பட்டுள்ளது. நிலைமையை சீராக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: நீயா... நானா... வா பார்க்கலாம்? - தங்கத்தோடு மோதும் வெங்காயம்...!