தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை உயர்த்தப்படும்: பிரதமர்

டெல்லி: சண்டையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

modi

By

Published : Jul 27, 2019, 10:18 PM IST

கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்று 20 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கார்கில் விஜய் திவாஸ் வெற்றிவிழா டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கார்கிலில் மூவர்ண கொடியை கவிழ்க்கும் எதிரிகளின் சதியை முறியடித்த ராணுவ வீரர்களுக்கும், அவர்களைப் பெற்ற தாய்மார்களுக்கு என்னுடைய நன்றை தெரிவித்துக்கொள்கிறேன்.

கார்கில் வெற்றி என்பது இந்தியாவின் பலம், பொறுமை, புனிதம், ஒழுக்கம் ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றியாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. பல ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.

வீரமரணம் அடையும் வீரர்களின் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை (Scholarship) உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details