உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் 19 வயது இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சாலையில் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அப்பெண், அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், செப்.29ஆம் தேதி உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால், இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.