தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் மார்ச் 31 வரை நீட்டிப்பு - வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் நீட்டிப்பு

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாகன ஆவணங்கள்
வாகன ஆவணங்கள்

By

Published : Dec 27, 2020, 6:20 PM IST

டெல்லி:கரோனா பரவல் காரணமாக, வாகன ஆவணங்களை புதுப்பிக்கமுடியாத சூழல் ஏற்பட்டதால், கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் காலாவதியான வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், வாகன ஒட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்ற ஆவணங்களின் செல்லுபடி காலம், 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது. அதில், "கரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆவணங்கள் செல்லுபடி காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் படி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காலாவதியான வாகன ஆவணங்கள் அனைத்தும் 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.

இந்த கால நீட்டிப்பு மூலம் மக்கள் எந்தவித சிரமமுமின்றி கரோனா காலத்தில் எளிதில் பயணிக்க முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் புதிய தலைவர் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details