கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடுவதைத் தவிர்க்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.
இதனால், மக்கள் அனைவரும் வேலையின்றி அத்தியாவசிய தேவைகளுக்கே சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சில பொருளாதாரச் சலுகைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது.
மேலும் இதில், விவசாயம் செய்ய இயலாதவர்கள், சாகுபடி செய்த பயிர்களை விற்பனை செய்ய முடியாதவர்கள், வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணம் செலுத்த முடியாதவர்களுக்காக மத்திய அரசு இரண்டு விழுக்காடு பயிர்க்கடன் மானியம், மூன்று விழுக்காடு ஊக்கத்தொகையையும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மூன்று லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன் வாங்கியுள்ள விவசாயிகள் கடனை திரும்பச் செலுத்தும் காலத்தினை மே 31ஆம் தேதிவரை நீட்டித்துள்ளதாகவும், ஆண்டு வட்டி விகிதங்களை அபராதமில்லாமல் செலுத்தலாம் எனவும் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஜார்க்கண்டில் பயிர்க்கடன் தள்ளுபடி: காங்கிரஸ் வாக்குறுதி