தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமர் கோயில் கட்ட நிதியளித்தால் வரி விலக்கு! - ராமர் கோயில் கட்டுமானப் பணி

டெல்லி: ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கினால் வரி விலக்கு அளிக்கப்படும் என மத்திய நிதித் துறை தெரிவித்துள்ளது.

ராம் கோயில் கட்ட நிதியளித்தால் வரி விலக்கு!
ராம் கோயில் கட்ட நிதியளித்தால் வரி விலக்கு!

By

Published : May 9, 2020, 12:12 PM IST

Updated : May 9, 2020, 12:17 PM IST

இது குறித்து மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வரலாற்று சிறப்புமிக்க இடமும், பொது வழிப்பாட்டு தலமுமான ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி அளிப்பவர்களுக்கு 80ஜி என்ற வருமானவரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

வருமானவரிச் சட்டம் 80ஜி-யின் படி, நன்கொடையாளரின் சொத்து மதிப்பில் 10 விழுக்காட்டிற்கு குறைவான அளவு நன்கொடை அளித்தாலும், இந்தச் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிட 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து முன்னதாகத் தொடங்கிய கட்டுமான பணிகள் தற்போது கரோனா ஊரடங்கால் அந்தப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க...சவுதியிலிருந்து 153 பயணிகள் கேரளா வருகை!

Last Updated : May 9, 2020, 12:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details