தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டின் எதிர்காலத்தை அழிப்பதற்காகவே சிஏஏ போன்ற சட்டங்கள் - மேதா பட்கர் குற்றச்சாட்டு - நாட்டை அழிக்கதான் சிஏஏ சட்டம் என மேத பட்கர் காட்டம்

மும்பை: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவற்றின் மூலம் நாட்டின் எதிர்காலத்தை மத்திய அரசு அழித்துவிட்டதாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Medha Patkar slams centre for CAA
Medha Patkar slams centre for CAA

By

Published : Jan 24, 2020, 9:57 AM IST

சிவில் லிபர்டி பீப்பிள்ஸ் யூனியன் பொது கூட்டத்தில் பேசிய மேதா பட்கர், நாட்டின் முக்கிய பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற தேவையற்ற விஷயங்களை மத்திய அரசு செய்துவருகிறது.

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றைக்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை அழிக்க மத்திய அரசு சதித்திட்டம் தீட்டுகிறது. தனது அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு இதனை செய்துவருகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களையோ, போராட்டகாரர்களையோ சந்திக்க மத்திய அரசுக்கு தைரியமில்லை. போராட்டத்தை நடத்திவரும் மாணவர்களுக்கும், இஸ்லாமிய பெண்களுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிஏஏ-வுக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தனர். பல்வேறு அமைப்புகளின் சமூக செயற்பாட்டாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இந்து மகாசபையை எதிர்த்தவர் நேதாஜி - மம்தா புகழாரம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details