பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்புக்கு மத்திய அரசு தடை - SFJ outfit group
டெல்லி: சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் ( Sikhs For Justice) என்னும் சீக்கிய அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது.

sikh
இதில், 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' (Sikhs For Justice) என்ற சீக்கிய அமைப்பை உபா (UAPA) சட்டத்தின் கீழ் தடை செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களின் ஒப்புதல்களோடு எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு, பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்திர சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டி' அமைப்பு, 2020ஆம் ஆண்டுக்குள் பஞ்சாபை காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.