ஜெய்ப்பூர்: விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களிடம் பேச மத்திய அரசு முனைந்துள்ள நல்ல விஷயம் என்றாலும் தாமதமானது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
இது குறித்து அசோக் கெலாட் ட்விட்டரில், “நம் நாட்டில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
விவசாயிகள் பிரச்னையை பிரதமர் நரேந்திர மோடி தீர்க்க வேண்டும். விவசாயிகளின் உண்மையான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.