தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் 310 கோடி ரூபாய் செலவில் தொழில்துறை பூங்கா அமைக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய சில பின்விளைவுகள் இருப்பதால், இந்த திட்டத்தை எதிர்ப்பதாக வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைச்சகத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "முழுமையாக இதை நிராகரிக்கவில்லை, தொழில்துறை பூங்காவின் சில திட்டங்களில் மாற்றம் செய்தல் இதற்கு அனுமதி அளிப்போம்" என்றார்.