மத்திய அரசு உருவாக்கியுள்ள கோவின் செயலி (The Covin App), இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி வெளியீடு திட்டத்தின் முக்கியப் பகுதியாகும். இந்தச் செயலியில் கோவின் பயன்பாட்டில் தடுப்பூசியின் கொள்முதல், விநியோகம், சுழற்சி, சேமிப்பு, டோஸ் முதலான அட்டவணைகள் காணப்படுகின்றன.
“நடுவண் அரசு கோவிட்-19 தடுப்பூசி கிடைத்தவுடன், அதனை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில், தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, கோவிட்-19 தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்களின் தரவுத்தளத்தை உருவாக்குவது இந்தச் செயலியின் ஒரு நடவடிக்கையாகும்.
இந்தச் சுகாதாரப் பணியாளர்களின் தரவுத்தளம் கோவிட்-19 தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பில் (கோவின்) பதிவேற்றப்பட உள்ளது” என்று சுகாதார அமைச்சகத்தின் உள்தொடர்பு கடிதத்தின் மூலம் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்ளக்கூடிய சுகாதார ஊழியர்களை அடையாளம் காணவும் அமைச்சகம் அனைத்து மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
கோவிட்-19 நோயாளிகளுக்கு சாத்தியமான தடுப்பூசி வழங்கவுள்ள நபர்கள், அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பு வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உள்-தசை, இன்ட்ரா-டெர்மல், சப்-கட்னியஸ் வழிகள் மூலம் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் அனுபவம் பெற்றவர்கள்.
இதில், எம்பிபிஎஸ் மருத்துவர்கள், பிடிஎஸ் மருத்துவர்கள், பணியாளர்கள் செவிலியர் (பிஎஸ்சி நர்சிங்), துணைச் செவிலியர், மருத்துவர்கள் (ஜிஎன்எம், ஏஎன்எம் போன்றவை), மருந்தாளுநர்கள், எம்பிபிஎஸ் இன்டர்ன்ஸ் மற்றும் பிடிஎஸ் இன்டர்ன்ஸ் போன்றவர்கள் அடங்குவர்.
கோவிட்-19 தடுப்பூசி இயக்கிகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு, தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்குத் தகுந்த பயிற்சி மேற்கொள்ளப்படும்.
மேற்கூறிய வகைகளிலிருந்து ஓய்வுபெற்ற பணியாளர்களையும் இதற்குப் பயன்படுத்திக்கொள்ள மாநிலங்கள் கருத்தில்கொள்ளலாம். அவை பொருந்தக்கூடியவை. மேலும், அதனால் தடுப்பூசிகளின் தேவையைப் பூர்த்திசெய்யவும் பயன்படுத்தப்படலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு தடுப்பூசி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, அரசு மிஷன் கோவிட் சுரக்ஷாவுக்கு 900 கோடி ரூபாய் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளது.