இந்திய ராணுவத் தலைமையக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மூன்றாவது ராணுவ துணைத் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2017ஆம் ஆண்டு, இந்தியா-சீனா டோக்லாம் நெருக்கடியின்போது, மேலும் ஒரு ராணுவ துணைத்தலைவர் தேவை என உணரப்பட்டது.
அதனால் மூன்றாவது துணைத் தலைவர் பதவியை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ராணுவ நடவடிக்கைகளில் துணைத் தலைவர் பணிச் சுமையை குறைக்க முடியும்.