தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெள்ளம் பாதித்த அஸ்ஸாமுக்கு முதல்கட்ட நிதியாக ரூ. 346 கோடி ஒதுக்கீடு

கவுஹாத்தி: கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநிலத்திற்கு முதல்கட்ட நிதியாக ரூ. 346 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Assam
Assam

By

Published : Jul 23, 2020, 10:46 AM IST

வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாம் தற்போது கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதுவரை 89 பேர் பாதிப்பின் காரணமாக உயிரிழந்தனர், 26 லட்சம் பேர் வெள்ளத்தின் தாக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

அம்மாநிலத்தின் சூழல் குறித்து மத்திய நீர் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் சந்தித்து விளக்கினார். இதையடுத்து மாநிலத்தில் மீட்பு, புனரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.346 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்த வெள்ளப் பிரச்னை ஆண்டுதோறும் தொடர்ந்துவருவதால் இதற்கு நிரந்தரத் தீர்வு பெறும் வகையில் அஸ்ஸாமின் அண்டை பகுதியான பூட்டான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க:சிஏஜி அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details