தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான நிசார்கா புயல், மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
நிசார்கா புயல் பாதிப்பு: மேற்கு வங்கத்தில் மத்தியக் குழு ஆய்வு! - மேற்கு வங்கத்தில் பாதிப்பு மத்திய குழு ஆய்வு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிசார்கா புயலால் அதிகம் பாதித்த இரண்டு மாவட்டங்களை மத்தியக் குழுவினர் நேரடியாக ஆய்வு செய்யவுள்ளனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் புயலால் அதிகம் பாதித்த இரண்டு மாவட்டங்களை ஆய்வுசெய்வதற்கு ஏழு பேர் கொண்ட மத்தியக் குழு வரவுள்ளன. அக்குழுவின் உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மாவட்டங்களை ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்விற்கு ஒரு நாள் மட்டுமே ஒதுக்கியுள்ளதால், குழுவினர் வான்வழி ஆய்வை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியத்தின் கீழ் மாநில அரசுக்கு முன்கூட்டியே நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மத்தியக் குழுவின் கணக்கெடுப்பு அறிக்கையின்படி மாநில அரசுக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.