புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்குவதற்காகவும், தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்வதற்காகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சென்னை தேசிய தொற்று நோயியல் நிலைய இயக்குநர் மனோஜ் மர்க்கேகர், அறிவியலாளர்கள் கணேஷ்குமார், நேஷன், மருத்துவர்கள் அடங்கிய குழு புதுச்சேரி வந்தது.
இக்குழுவினர் கடந்த இரண்டு நாள்களாக கரோனா சிகிச்சை மருத்துவமனைகள், கட்டுப்பாட்டு மையங்களில் 7 நிலைகளில் ஆய்வுசெய்தனர். அதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை சந்தித்த மத்தியக்குழுவினர் கரோனா பணிகள் குறித்த அறிக்கையை அளித்துள்ளனர். அதில், தடுப்புப் பணிகளில் உள்ள பல்வேறு குறைகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, “புதுச்சேரியில் நாள்தோறும் 1,200 கரோனா கண்டறிதல் பரிசோதனைகளே செய்யப்படுகின்றன. தொற்றை விரைவாகக் கண்டறிய தினமும் 3,000 பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். சில ஆய்வகங்களில் பரிசோதனை முடிவுகள் தேங்கி கிடக்கின்றன. பள்ளி போன்ற பொது இடங்களில் நடமாடும் மருத்துவக்குழுவை அமர்த்த வேண்டும்.