கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டதின் பெக்கல் சந்திப்புக்கு அருகில் இன்று காலை கார் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்த பொழுது காருக்குள் ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காரில் இறந்து கிடந்த சிபிஐ அலுவலர்! - திருவனந்தபுரம் செய்திகள்
திருவனந்தபுரம்: காசர்கோடு அருகே சிபிஐ அலுவலர் ஒருவர் மாரடைப்பால் காரிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Central Intelligence
அங்கு விரைந்த காவல்துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு பரியாரம் மருத்துவக்கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வில் அவர், மாரடைப்பில் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அவர் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ அலுவலர் எனவும், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: நொய்டாவில் தீ விபத்து: அணைக்கும் பணிகள் தீவிரம்!