இது தொடர்பாக புதுச்சேரி சமூகநலத்துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் கந்தசாமி அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கரோனா (கோவிட் 19) நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி, குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ பருப்பு என்ற அளவில் மூன்று மாதங்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கான நற்செய்தி இது! - சமூக நலத்துறை அமைச்சர்
புதுச்சேரி: குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு அறிவித்த பொருள்கள் புதுச்சேரியில் 10ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி குடும்ப அட்டைத்தாரர்களுக்கான நற்செய்தி இது!
இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் மேற்கண்ட இலவச அரிசி, பருப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு விரைந்து மேற்கொண்டது. அதனடிப்படையில் வரும் 10ஆம் தேதி முதல் இலவச அரிசி, பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கடந்த 15 நாள்களில் 1,13,117 பேர் கைதுசெய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு!
Last Updated : Apr 8, 2020, 7:52 PM IST
TAGGED:
சமூக நலத்துறை அமைச்சர்