மேற்கு வங்கத்தில் பொறுப்பில் இருக்கும் மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை மத்திய பணிகளுக்காக விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அவர்களை விடுவிக்க அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஏற்கனவே புதிய பணி அளிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை உடனடியாக விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின் நகல் மேற்குவங்கத்தின் டிஐிபிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
'மத்திய அரசுக்கு அதிக அதிகாரம்'
இதுகுறித்து மேற்கு வங்க தலைமை செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிக்கையில், "ஐபிஎஸ் சட்டத்தின்படி, சர்ச்சை எழும்பட்சத்தில், மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. மூன்று ஐபிஎஸ் அலுவலர்களுக்கு மத்திய அரசில் ஏற்கனவே புதிய பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.