கரோனா பாதிப்பு பரிசோதனைக்காக அண்மையில் சீனாவிலிருந்து லட்சக்கணக்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளை பல மாநில அரசுகள் கொள்முதல் செய்துள்ளன. கரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை விரைவாக பரிசோதித்து முடிவுகளை கண்டறிய இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுகின்றன.
இந்த கருவிகள் சரியாக இயங்கவில்லை எனக் குற்றாச்சாட்டுகள் ஆங்காங்கே எழுந்த நிலையில், ஐ.சி.எம்.ஆர் பரிசோதனை சான்று வழங்கும் வரை கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.