கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் கனமழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டு பல மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மழையால் கடுமையாக பாதிப்படைந்தன. பாதிக்கப்பட்ட மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை, பாதுகாப்பு படை ஆகியவை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு! - வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்
டெல்லி: வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ. 4,432.10 கோடி நிதியை அமித் ஷா தலைமையில் கூடிய அமைச்சரவை குழு கூட்டம் ஒதுக்கியுள்ளது.
Amit Shah
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சேதமடைந்த பொது சொத்துகளை சீரமைப்பதற்காக நிதி வழங்கவும் அந்தந்த மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூடிய அமைச்சரவை குழு கூட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ரூ. 4,432.10 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.