தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சாலை மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்' - நிதின் கட்கரி - Highway Minister Nitin Gadkari

புதுச்சேரியில் சாலை மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Minister Nitin Gadkari
Minister Nitin Gadkari

By

Published : Feb 28, 2020, 10:39 PM IST

புதுச்சேரியில் நடைபெற்றுவரும் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கோகுல கிருஷ்ணன், தலைமைச் செயலர் அஸ்வின்குமார், அரசுத் துறை செயலர்கள், துறைச்சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதுச்சேரி மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகள் என அறிவிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கோரிக்கையை பரிசீலிக்க கால அவகாசம் தேவை. புதுச்சேரிக்கு தேவையான அனைத்து சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.

தேசிய நெடுஞ்சாலைகள் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

மேலும் இக்கூட்டத்தில் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல், அகலப்படுத்துதல், புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் புதுச்சேரி முதல் மகாபலிபுரம், விழுப்புரம் முதல் நாகப்பட்டினம், முருங்கப்பாக்கம் முதல் சிவாஜி சிலை, மதகடிப்பட்டு முதல் புதுச்சேரி வரையிலும் நான்கு வழிச்சாலைகள் அமைப்பது தொடர்பாகக் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி ஆரோவில்லில் கோலாகலமாக தொடங்கிய தேசிய குதிரையேற்றப் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details