கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சில்லறை வர்த்தகத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட உரத்தின் அளவு ஏறத்தாழ 8.02 லட்சம் டன்னாக இருந்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, விவசாயிகளுக்கு சில்லறை வர்த்தகத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்ட உரத்தின் அளவு 10.63 லட்சம் டன், அதாவது கடந்த நிதியாண்டின் தொடக்கத்தில் விற்பனையான அளவைவிட 32% அதிகமாக இந்தாண்டின் தொடக்கத்தில் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.
கரோனா ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளின் வரிசையில் விவசாய நடவடிக்கைகளைத் தொடர மத்திய அரசு அளித்த தளர்வின் பயனை இது காட்டுகிறது.
சில்லறை வியாபாரிகளுக்கு உரங்களை விற்பனை செய்ததில் வர்த்தகத்தின் அளவு இன்னும் கூடுலாக இருந்ததுள்ளது. இந்த மாதத்தின் முதல் 22 நாட்களில், விநியோகஸ்தர்கள் 15.77 லட்சம் டன் உரங்களை வாங்கியுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான விற்பனையை விட 46% கூடுதல் அளவாகும்.
ஏராளமான கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தபோதிலும், மத்திய - மாநில அலுவலர்கள் மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகளால் நாட்டில் உரங்கள் உற்பத்தி, வழங்கலில் எந்த பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து இந்திய உழவர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் பி. செங்கல் ரெட்டி, "உணவுப் பாதுகாப்பைப் பொருத்தவரை, நாட்டில் உணவு தானியங்களுக்கு பஞ்சமில்லை, எதிர்காலத்திலும் எந்த பிரச்னையும் இருக்காது. அரிசி விதைப்புப் பகுதியில் அனைத்தும் சீராக நடைபெற்று வருகிறது. கோவிட் -19 காரணமாக ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்க பயிர்களை பல்வகைப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
உர விற்பனை : விவசாய நடவடிக்கைகளைத் தொடர மத்திய அரசு தீவிர நடவடிக்கை! கோதுமை, அரிசி போன்ற பிரதான உணவு தானியங்களை மட்டும் நம்புவதற்கு பதிலாக, அரசாங்கம் பல்பொருள் உற்பத்தி அணுகுமுறையை பின்பற்றி பழங்கள், காய்கறிகளின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க :இலவசமாகிறது கூகுளின் Meet ஆப்!