சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்தவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. நக்சல்கள் ஆதிக்கம் செய்யும் இடங்களில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் விக்ரம் சிங், காவலர்கள் விஷ்வகர்மா திவாரி, சாகர் அசோக், ரஷீத் கான், ஓட்டுநர் விக்ரம் ஆகியோர் பயணித்த இந்த வாகனம் ஆனந்த்கார் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஆயுத காவல் படையினர் சென்ற வாகனம் விபத்து! - SSB vechile accident
கன்கர்: மத்திய ஆயுத காவல் படையினர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
![ஆயுத காவல் படையினர் சென்ற வாகனம் விபத்து! மத்திய ஆயுத காவல் படையினர் சென்ற வாகனம் விபத்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7486146-962-7486146-1591345460216.jpg)
மத்திய ஆயுத காவல் படையினர் சென்ற வாகனம் விபத்து!
இது குறித்து அனந்த்கார் காவல் நிலைய பொறுப்பாளர் கூறுகையில், “மத்திய ஆயுத காவல் படையினர் சென்ற வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஐந்து அலுவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் போலி விதை விற்பனையாளர்கள் - கடும் சட்டம் தேவை..!