தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரிவினைவாத இயக்கத்துடன் பேச்சுவார்த்தை: அசாமில் ராணுவத்தை திரும்பப்பெறும் அரசு - இராணுவத்தை திரும்பப்பெறும் மத்திய அரசு

தேஜ்பூர்: அசாம் மாநிலத்தில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களின் நடவடிக்கைகள் குறைந்துள்ளதை அடுத்து அங்குள்ள ராணுவத்தை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Center Likely to Withdraw Army From Assam
Center Likely to Withdraw Army From Assam

By

Published : Jan 21, 2020, 2:39 PM IST

அசாம் மாநிலத்தில் நடக்கும் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்துவருகிறது. மேலும் இந்த அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் தற்போது குறைந்துள்ளதால் அசாம் மாநிலத்தில் அமைதி திரும்பி வருகிறது.

இதனிடையே துணை ராணுவத்தின் உதவியுடன் இந்தச் சூழ்நிலையை கையாள மாநில அரசும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. ஒருவொரு கட்டமாக ராணுவத்தை திரும்பப்பெறும் முன்னர் மாநிலம் முழுவதும் உள்ள களநிலவரம் என்னவென்பதையும் கண்காணிக்க மத்திய அரசும் மாநில அரசும் முடிவு செய்துள்ளது.

பிரிவினைவாத இயக்கமான என்.டி.எஃப்.பி உடன் (NDFB) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டப் பின்னர் உல்ஃபா (ULFA) என்ற அமைப்பு மட்டும்தான் அங்கு செயல்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 17ஆம் தேதியன்று மத்திய அரசுடனும், அசாம் அரசுடனும் என்.டி.எஃப்.பி-யின் தடைசெய்யப்பட்ட ஒரு பிரிவானது முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கிடையில் என்.டி.எஃப்.பி-யின் ஒரு குழு அசாம் புத்தானின் எல்லையில் நடமாடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. அக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரண்டு அரசும் முயற்சி செய்துவருகிறது.

அசாமில் ராணுவத்தை திரும்பப்பெறும் அரசு

இந்நிலையில் மியான்மரில் குடிகொண்டிருந்த பிரிவினைவாத கும்பலுக்கெதிராக அந்நாட்டின் ராணுவம் தாக்குதல் நடத்தியதால், செயல்பாட்டிலிருக்கும் உல்ஃபா அமைப்பின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவருகிறது.

தற்போது உல்ஃபாவிலுள்ள நபர்களின் எண்ணிக்கை 150ஆக இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அமைப்பு மியான்மரில் எங்கும் நிரந்தர முகாமிடவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'உயிர்களை அழிக்கும் பாஜக நிர்வாகம்' - சீதாராம் யெச்சூரி சாடல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details