தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

11 நாளில் கரோனாவை வென்ற 105 வயது மூதாட்டி! - கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த மூதாட்டி

போபால்: மாநிலத்தில் மிக வயதான பெண்மணியான 105 வயது மூதாட்டி கரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.

11  நாளில் கரோனா வென்ற 105 வயது மூதாட்டி!
11 நாளில் கரோனா வென்ற 105 வயது மூதாட்டி!

By

Published : Jul 1, 2020, 3:36 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் பகுதியைச் சேர்ந்தவர் முரி பாய். 105 வயதான இந்த மூதாட்டிதான் மாநிலத்திலேயே வயதானாவர் ஆவர்.

இந்நிலையில் முரி பாய்க்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கடந்த ஜூன் 18ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தார் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும்வந்தது.

11 நாளில் கரோனா வென்ற 105 வயது மூதாட்டி!

இதனையடுத்து கடந்த 29ஆம் தேதி முரி பாய்க்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதில், தொற்று உறுதிசெய்யப்பட்டு 11 நாளிலே பாதிப்பிலிருந்து வீடு திரும்பிய மூதாட்டிக்கு உற்றார் உறவினார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 199 பேர் கரோனா வைரஸிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது இரண்டாயிரத்து 607 பேர் கரோனா வைரஸ் தொற்றிற்காக சிகிச்சை பெற்றும், 564 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...அவசர காலம், காங்கிரஸின் சுயநல அரசியலை நினைவுப்படுத்துகிறது- பாஜக ராம் மாதவ்!

ABOUT THE AUTHOR

...view details