மத்திய அரசு சார்பாக ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேசிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். குடிமக்களின் விவரங்களை அறிவதற்காகவும், மாநில மற்றும் நகரங்களுக்கேற்ப நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
2012ஆம் ஆண்டில் மத்திய அரசின் கணக்குபடி டெல்லியின் மக்கள்தொகை ஒரு கோடியே 90 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தலைநகரில் 5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் குடியேறி வருவதால், அரசின் திட்டங்களில் சமநிலைத்தன்மையை ஏற்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கவிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதில் சாத்தியமில்லை என தெரிகிறது.