தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இங்கு கன்னிப் பெண்களுக்கு செல்ஃபோன் தடை! பின்தங்கி இருக்கும் குஜராத் கிராமம்! - unmarried girls

காந்திநகர்: திருமணமாகாத பெண்கள் செல்ஃபோன் உபயோகித்தால், பெற்றோருக்கு அபாரதம் விதிக்கும் அவலம் குஜராத்தில் அரங்கேறி வருகிறது.

Cellphone banned for unmarried girls in Banaskantha

By

Published : Jul 17, 2019, 8:19 AM IST

Updated : Jul 17, 2019, 10:16 AM IST

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு இப்படி ஒரு கொடுமை அரங்கேறுகிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். ஆம் பிரதமரின் மாநிலமான குஜராத்தில் பானஸ்காந்த் தண்டிவாடா பகுதியில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் செல்ஃபோன் உபயோகிக்கக் கூடாதாம்.

இந்த உத்தரவு அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து கூடி முடிவெடுத்துள்ளது. தடையை மீறி திருமணமாகாத பெண்கள் செல்ஃபோன் உபயோகித்தால், அவரது தந்தைக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது அந்த பஞ்சாயத்து.

இது குறித்து ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் கூறுகையில், திருமணத்திற்கு தேவையில்லாமல் ஆகும் செலவுகளை குறைப்பதற்காகவே, பட்டாசு வெடிப்பது, டிஜே உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது என்றும், பெண்களின் ஒழுங்கிற்காகத்தான் செல்ஃபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Last Updated : Jul 17, 2019, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details