தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு! - 5 lakh worth cell phones stolen in Puducherry

புதுச்சேரி: ஊரடங்கை சமயத்தில் செல்போன் கடையிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் திருட்டு நடந்த கடை
செல்போன் திருட்டு நடந்த கடை

By

Published : May 11, 2020, 10:07 AM IST

புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் 45 அடி சாலையில் மதன் மொபைல் என்கிற செல்போன் கடையை நடத்திவருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அன்றிலிருந்து அவர் கடையை திறக்கவில்லை.

தற்போது அவர் மீண்டும் கடையை திறந்தபோது கடையில் இருந்த விலை உயர்ந்த 16 செல்போன்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.


இதனை தொடர்ந்து மதன் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அருகிலுள்ள கடையின் சிசிடிவி காட்சியை கொண்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஊரடங்கு காலத்தில் செல்போன் கடையில் நடைபெற்ற திருட்டு குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட செல்போன்களின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று உரிமையாளர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பின்வாசல் வழியே மதுவிற்ற டாஸ்மாக் ஊழியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details