தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மொபைல்போன் கடைக்காரர் கத்திமுனையில் கடத்தல் - அதிரடியாக மீட்ட காவல்துறை - புதுச்சேரி கடத்தல் வழக்கு

புதுச்சேரி: கத்திமுனையில் கடத்தப்பட்ட மொபைல்போன் கடைக்காரரை காவல்துறையினர் அதிரடியாக மீட்டு கடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.

cell phone shop owner kidnap case
cell phone shop owner kidnap case

By

Published : Oct 24, 2020, 2:12 PM IST

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அண்ணாசாலை அருகே மொபைல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அவரின் கடைக்கு வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியைக் காட்டி ராஜ்குமாரை மிரட்டி இருசக்கர வாகனத்தில் ராஜ்குமாரை கடத்திச் சென்றனர்.

அப்போது அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் ராஜ்குமாரை கடத்திச் சென்றவர்களின் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதற்கிடையே இதுகுறித்து புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்

அதனைத்தொடர்ந்து ராஜ்குமாரை கடத்தியவர்கள் புதுச்சேரி கடலூர் சாலை வழியாக சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதற்கிடையே அங்கு விரைந்த சென்ற காவல்துறையினரை பார்த்தவுடன் கடத்திய கும்பல் ராஜ்குமாரை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

இதையடுத்து, காவல்துறையினர் ராஜ்குமாரை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராஜ்குமாருக்கும், அவரது நண்பர் ஒருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிரச்னை இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details