தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்ற முப்படைத் தலைமைத் தளபதி! - ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்ற முப்படை தலைமைத் தளபதி

டெல்லி: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

Rawat
Rawat

By

Published : Oct 27, 2020, 4:28 PM IST

லஞ்சம், ஊழலை ஒழிக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 27ஆம் தேதிமுதல் நவம்பர் 2ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

நேர்மையாகவும் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகவும் பொதுமக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து செயல்படுவோம் என அவர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். இம்மாதிரியான பண்பு குணநலன்கள் பாதுகாப்புப் படையினருக்கே உரித்தானது என அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய பாதுகாப்புப் படையின் பாரம்பரியத்தைக் காக்கும் நோக்கில் கொடுக்கப்பட்ட பணியை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செய்திட அவர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details