கடலூரை அடுத்த சாவடி வண்ணான்தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் (48). இவர் கடந்த 19ஆம் தேதி தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இருசக்கர வாகனத்தில் தூக்கனாம்பாக்கம் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்பொது தூக்குபாலம் அருகே வந்துகொண்டிருந்த அவர்கள் மீது எதிரில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிய முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப்பார்த்த அந்தப் பகுதி மக்கள் கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கவே அவர்கள் விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.