தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

83 தேஜஸ் விமானங்கள் வாங்க ரூ.48,000 கோடிக்கு ஹெச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒப்பந்தம் - பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

83 தேஜஸ் விமானங்கள் வாங்க ரூ.48,000 கோடிக்கு ஹெச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Tejas fighters
Tejas fighters

By

Published : Jan 14, 2021, 9:04 AM IST

நாட்டின் பாதுகாப்புத்துறை மேம்பாட்டிற்கான முக்கிய நடவடிக்கையாக எல்சிஏ (LCA) தேஜஸ் போர் விமானங்களை வாங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமெடெட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தத் ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பிற்கும், தற்சார்பு இந்தியாவை உறுதி செய்யும்விதமாக பாதுகாப்பு உற்பத்தித்துறையில் பெரிய முதலீடு செய்யப்பட்டுள்ளது எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்துடன் சேர்த்து பாதுகாப்பு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக பாதுகாப்புத்துறை தளவாடங்களை பழுதுபாரக்கும் மையங்களை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க:பயிர் காப்பீட்டு திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்- பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details