தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவை எதிர்க்கும் 'காளான் உணவு' - இந்திய ஆராய்ச்சியாளர்கள் தகவல் - செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி.சி.எம்.பி)

ஹைதராபாத்: கரோனா தொற்றை எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட காளான் உணவை, இந்திய ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.

ush
ush

By

Published : Oct 20, 2020, 1:05 PM IST

Updated : Oct 20, 2020, 1:16 PM IST

ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி.சி.எம்.பி) காளான்கள் மூலம் வைரஸ் எதிர்ப்பு உணவை தயாரிக்கும் ஆய்வில் களமிறங்கியுள்ளனர். இந்த ஆய்வில் அடல் இன்குபேஷனின் துணை நிறுவனமான குளோன் டீல்ஸ் நிறுவனமும் இணைந்து பணியாற்றி வருகிறது.

பொதுவாகவே காளான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. மேலும், அதன் பீட்டா-குளுக்கன்களில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் எளிதில் தொற்றை விரட்டும் தன்மை கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த உணவானது கரோனா தொற்றை எதிர்க்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

காளான் உணவு

இதுகுறித்து சி.சி.எம்.பி இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், " கரோனாவை எதிர்த்து போராட இந்த மருந்து உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். இந்த உணவானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வரக்கூடும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், எய்ம்ஸ் ஏற்கெனவே இந்த திட்டத்தை மருத்துவ சோதனைகளில் வைத்துள்ளது. எய்ம்ஸின் நாக்பூர், போபால் மற்றும் நவி மும்பை மையங்களில் தற்போது அதன் செயல்திறன் குறித்து சோதனைகள் நடந்தப்பட்டு வருகின்றன.

Last Updated : Oct 20, 2020, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details