தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2008 பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு - ஒருவர் கைது - 2008 பெங்களூரு குண்டுவெடிப்பு

பெங்களூருவில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஷோயிப் என்ற பயங்கரவாதியை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

2008 பெங்களூரு குண்டுவெடிப்பு
2008 பெங்களூரு குண்டுவெடிப்பு

By

Published : Sep 22, 2020, 5:13 PM IST

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், நேற்று (செப் 21) கேரள மாநிலம் கொச்சியில் பதுங்கியிருந்த ஷோயிப் என்ற பயங்கரவாதியை ஏசிபி வேணுகோபால் தலைமையிலான பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்தனர்.

கொச்சியில் இருந்து இன்று காலை அவர் பெங்களூருவிற்கு தனி விமானம் மூலம் அழைத்துவரப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாக மத்திய குற்றப்பிரிவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அழைத்துவரப்பட்ட பயங்கரவாதி ஷோயிப்

கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டுவரும் குற்றவாளியான ஷோயிப்பை பிடிக்க சிவப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அவமதித்த எம்.பி.க்கள்... ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க மாநிலங்களவை துணைத்தலைவர் முடிவு!

ABOUT THE AUTHOR

...view details