தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

டெல்லி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 15) வெளியாகிறது.

cbse-to-announce-class-10-results-on-july-15
cbse-to-announce-class-10-results-on-july-15

By

Published : Jul 14, 2020, 4:29 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து, ரத்தான பாடங்களின் மதிப்பெண்களை உள்ளீட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஜூலை13) முன்னறிவிப்பு ஏதுமின்றி, 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்தது.

இதையடுத்து, பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை15) வெளியிடப்படுவதாக தகவல் வெளியானது. இதனை உறுதிசெய்யும் விதமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' ட்வீட் செய்துள்ளார்.

அதில்,"என் அன்பான மாணவர்களே, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களே, பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வாருங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் - வரலாற்றை கலை வழியாக நினைவூட்டும் மாணவர்

ABOUT THE AUTHOR

...view details