இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பதால் பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு வழிகாட்டியை வெளியிட்டுள்ளது!
டெல்லி: ஆன்லைனில் பாலியல் அச்சுறுத்தல், பண மோசடி உள்ளிட்டவற்றில் மாணவர்கள் விழிப்போடு செயல்பட அதுகுறித்த இணைய பாதுகாப்பு வழிகாட்டியை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
இதனால் மத்திய அரசின் சிபிஎஸ்இ வாரியம் ஆன்லைனில் தனது ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளை எடுக்க தொடங்கியிருக்கிறது.
மேலும் மாணவர்கள் ஆன்லைன் பயன்பாட்டை அதிகரித்துள்ளதால் அதற்கேற்பவும் சைபர் பீஸ் ஃபவுண்டேஷன் (Cyber Peace Foundation) என்னும் நிறுவனத்தோடு இணைந்து 9 -12ஆம் வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளும் வண்ணம் அவர்கள் ஆன்லைனில் சந்திக்கும் பிரச்னை, அச்சுறுத்தல், ஆன்லைன் மோசடி, பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல், சைபர் பாதுகாப்புடன் மேலும் நாட்டு குடிமகனின் உரிமை, சுதந்திரம், பொறுப்புகள் ஆகியவை குறித்த பாடங்களை தயாரித்துள்ளதாக சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.