தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

30% குறைக்கப்படும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் - ல்வி நிறுவனங்கள் மூடல்

டெல்லி: ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30 விழுக்காடு குறைக்கவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

cbse-rationalises-syllabus-by-30-percent-for-classes-9-12-to-make-up-for-academic-loss
cbse-rationalises-syllabus-by-30-percent-for-classes-9-12-to-make-up-for-academic-loss

By

Published : Jul 7, 2020, 6:26 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மார்ச் மாதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகளுடன் தற்போதுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில்கொண்டு, பல்வேறு மாநிலங்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்து மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

மேலும், பல்கலைக்கழக, கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களின் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இறுதியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரையுள்ள சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30 விழுக்காடு குறைக்கவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டிலும் உலகிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைப் கருத்தில்கொண்டு, ​​சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை திருத்தி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநெறி சுமையை குறைக்க அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்த முடிவுகளை எடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து அனைத்து கல்வியாளர்களும் தங்களது பரிந்துரைகளை தெரி்விக்குமாறு அழைப்பு விடுத்திருந்தேன். இதையடுத்து ஆயிரத்து 500 பரிந்துரைகளை நாங்கள் பெற்றோம். இதனைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பாடத் திட்டங்கள் குறைப்பு குறித்து பரிந்துரைகள் வழங்கிய அனைவருக்கும் நன்றி.

மாணவர்களுக்கான கற்றல் திறன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, முக்கிய கருத்துகளைத் தக்கவைத்துக்கொண்டு பாடத்திட்டங்களை 30 விழுக்காடுவரை பகுத்தறிந்து குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details